தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனி கவனம் செலுத்தி கவனித்து வருகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கொரோனா அறிகுறி இல்லதாவர்களை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனாவால் […]
கொரோனா நோயாளிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்துடன் பேச அனுமதி. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பலர் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் பலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள், செல்போன்கள் மூலமாக குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் பேச அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வீடியோ கான்பிரன்சிங்கில் பேச அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், நோயாளிகள் குடும்பத்தினரை நேரில் பார்க்க முடியாமல், குடும்பத்தை விட்டு பிரிந்தது போன்ற உணர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா சிகிக்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 127 கோடி மதிப்பிலான 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் உருவாக்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை முழுக்க முழுக்க நவீன கருவிக்கள் […]
சீனாவின் மிகப்பெரிய ஆய்வகங்களில் ஒன்றான யிஷெங் பயோ பார்மா (Yisheng Biopharma) கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி எலிகள் மற்றும் முயல்களில் பரிசோதிக்கப்பட்டு நல்ல பலன்களைப் பெற்றுள்ளது என யிஷெங் பயோ பார்மாவின் தலைவர் ஜாங் யி கூறியுள்ளார். அடுத்த கட்டமாக குரங்குகளில் தடுப்பூசியை பரிசோதிப்பது என்றும், உலகெங்கிலும் உள்ள மருந்து நிறுவனங்கள் கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பூசிகளைப் பரிசோதித்து வருவதால், குரங்குகளில் விலை மிகவும் உயர்ந்ததாக ஜாங் யி கூறுகிறார். ஆய்வகங்களில் […]
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,276 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது. இன்று 842 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 27,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று மட்டும் […]
நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சென்னை வி.ஆர்.பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் .நமக்கு […]
ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும் என தெரிவித்தார். கடந்த 1992-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, E-Gram மொபைல் செயலியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய மோடி, கொரோனா தடுப்பு பணியில் ஊராட்சிகளின் பங்கு […]
கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் 5-வது மாநிலமாக திரிபுரா இணைத்துள்ளது. கொரோனா தனது கோர முகத்தை இந்தியாவிலும் காட்டி வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 லிருந்து 23,077 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325-லிருந்து 4,749 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் 5-வது மாநிலமாக திரிபுரா இணைத்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கொரோனாவால் 2 […]
கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். தற்போது 17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவாமல் இருக்க நாடுமுழுவதும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், […]