கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் இன்று தமிழகம் வருகிறது மத்தியக்குழு . தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே விமானம் மூலம் இன்று தமிழகம் வருகிறது மத்தியக்குழு .இந்த குழு முதலமைச்சர் பழனிசாமி , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலருடன் ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான […]
நாடு முழுவதும் கொரோனாவால் சராசரியாக 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 லிருந்து 23,077 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325-லிருந்து 4,749 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 6430 பேரும், குஜராத்தில் 2624 பேரும், டெல்லியில் 2376பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் […]
கொரோனா வைரஸின் தாக்கம் உலக்கையை அச்சுறுத்தி வருகிறது. உலகில் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டுகிறது. இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 99,473-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,66,673-ஆக உள்ளது. அதிகமாக உயிரிழந்தோரில் இத்தாலி (18,279) முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக அமெரிக்கா (17,838), ஸ்பெயின் (15,970), பிரான்ஸ் […]
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்.,15 ந்தேதியும் ஐபில்எல் தொடங்க வாய்ப்புகள் குறைந்த அளவே காணப்படுவதாக கிரிக்கெட் வட்டாரத்தகவல் வெளியாகியுள்ளன. உலகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பரவலை தடுக்ககடுமையான நடவடிக்கைகளை அரசு கையில் எடுத்து வருகின்றது.இந்நிலையில் 2020 நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டியானது மார்ச் 29 ந்தேதி நியப்படி தொடர்ந்து இருக்க வேண்டும் ஆனால் எங்க வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய காலக்கட்டம் […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் அடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு கூறி வந்தனர். மேலும் அரசு பணியாளர்கள் காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு உணவு பிடி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டை விட்ட வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல ஸ்விக்கி, சோமாடோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான ரேஷன் பொருட்களை சோமாடோ நிறுவன ஊழியர்கள் […]
கேரளாவிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள தமிழகர்கள் 3 பேர் கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் ஆம்புலன்சில் வந்த 3 பேரும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று ஊரடங்கு பின்பற்றி வரும் நிலையில், பல விஷயங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.