தென்மேற்கு பருவக்காற்று மழையால் கர்நாடக மாநிலங்களில் பெய்து வந்த தொடர் மழையால் அங்கு உள்ள அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பியது. இதனால் காவிரி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் பரிசல் இயக்கவும் , சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்து இருப்பதால் 17 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் மீன் மார்க்கெட் மற்றும் கோத்திக்கல் வரை பரிசில் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி […]