சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை தொடர்பான கூடுதல் விவரத்தை அளிக்கும் வகையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்டாவில் 1ம் தேதி […]
நீலகிரி : வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், இதனால் நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை கொட்டித் தீர்த்தது. அதிலும், நேற்று முழுவதும் நல்ல மழை பெய்ததன் காரணமாக ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு நீலகிரி குன்னூர் தாலுகாவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மழையின் தீவிரத்தை புரிந்து கொண்டு அதன் முன்னேற்பாடாக […]
குன்னூரில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு கத்தி குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம்,குன்னூர் ஒய்எம்சி அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற நிலையில்,அப்போது அவரை பின்தொடர்ந்த ஆசிக் என்ற இளைஞர் பள்ளி அருகே மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.இதனைக் கண்ட பொதுமக்கள் இளைஞரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது,அந்த இளைஞர் மது போதையில் இருந்தது […]
குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை தாக்கல். கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் குழு ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து முழு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜிநாத் சிங்கிடம் ஹெலிகாப்டர் விபத்து தோதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த விசாரணை […]
குன்னுரில் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மோசமான வானிலையே காரணம் என தகவல். கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி குன்னுர் அருகே Mi-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகின் மிக அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் […]
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனிடையே,எம்ஐ-17 ஹெலிகாப்டரின் பிளாக் […]
நீலகிரி:குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை ராணுவ தளபதி எம்.எம்.நரவனே இன்று காலை பார்வையிடுகிறார். கடந்த 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ முகாமிற்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது காட்டேரி நஞ்சப்பாசத்திரம் பகுதியில் உள்ள வனப்பகுதியின் மேலே […]
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்க்கு முதல்வர் தனித்தனியாக இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்த 11 பேரின் உடல்களும் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவர்களது உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று மலர் […]
முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரியின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள்.இதனையடுத்து,சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிஹாப்டர் புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற […]
உலகம் முழுவதும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்தியாவில் கடந்த 3 நாட்களில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருகின்றனர். இதையெடுத்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முக கவசங்கள் அணிந்தபடியே […]