பிஎஸ்என்எல் நிறுவனம் 20,000 ஒப்பந்த ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அரசின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். சமீபத்தில் சம்பள செலவுகளை குறைக்க, மத்திய அரசு ஒய்வு வயது நெருங்கியவர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்ததை அடுத்து 92,000க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற்றனர். தற்போது மீண்டும் ஒப்பந்த பணிகளின் செலவை குறைக்க பிஎஸ்என்எல் நிறுவனம் 20,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். […]