உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர் ராவ் பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவை இரத்து செய்தார். இதையடுத்து தீணையப்புத்துறை இயக்குநராக அலோக் வர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் நாகேஸ்வர் ராவ் மீண்டும் சிபிஐ இடைக்கால இயக்குநராக பதவியேற்றார்.இந்த சூழ்நிலையில் அலோக் வர்மா பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவை நாகேஸ்வர் ராவ் ரத்து செய்ததையடுத்து அதிருப்தி அடைந்த 2 அதிகாரிகள், நாகேஸ்வர் ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.