புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை பேரை தாண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. […]