நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக – திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஏற்கனவே, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது. திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையிலான […]