தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பதாக முற்றுகை போராட்டம். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. பெகாஸஸ் பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் […]
மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒத்திவக்கப்பட்ட மத்திய பிரதேச சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் இன்று மீண்டும் கூட்ட […]
தமிழக அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறகிறது. தமிழக அமைச்சரவை கூட்டம் செப்.9 தேதி கூடுகிறது.இதில் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதனால் இவர்களின் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்ட பின் விடுதலை குறித்து அறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து, உத்தரவிட்டுள்ளது.மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி சைலேஷ் பார்மர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த 2014ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் மனுவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த […]