பஞ்சாபி பாடகரும்,காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ்வாலா மான்சா மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு மூஸ்வாலா மற்றும் 424 பேரின் பாதுகாப்பை வாபஸ் பெற்ற ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூஸ்வாலா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் பஞ்சாபில் உள்ள தங்கள் கிராமமான மான்சாவுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது,அவரது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத […]
ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதன் பின் மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை […]
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் காலமானார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் இன்று காலமானார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. இவர், அகாலிதள உறுப்பினராக தனது முதல் தேர்தலில் போராடி 1960 களில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். ராஜஸ்தானின் சாத்னா தொகுதியில் இருந்து 1962 இல் மூன்றாவது மக்களவையில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி வருத்தத்தைத் தெரிவித்ததோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் […]
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷுக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. பெங்களூரில் உள்ள டி.கே.சுரேஷின் இல்லத்திலும் சிபிஐ சோதனைகள் நடந்து வருகின்றன.