காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனே கார்கே இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மல்லிகார்ஜுனே கார்கே, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதரா மற்றும் மூத்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். அதற்கு முன்னதாக கார்கே, இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்தினார். மேலும் 24 ஆண்டுகளில் காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வாவது இதுவே […]