டெல்லி : உத்திர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்று முகலாயர் ஆட்சி காலத்தில் இந்து கோவில் மீது கட்டப்பட்டது என உள்ளூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மசூதிக்கு வந்தனர். அப்போது அங்கு ஆரம்பித்தது வன்முறை, பதட்டம். அங்கு ஆய்வு நடத்தக்கூடாது என தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறி சில உயிரிழப்புகள் நேர்ந்தன. அந்த இடத்தில் தற்போது வரை பதட்டமான சூழல் […]
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றம் செய்தார். அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும், கடலூர், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் தலா 5 தாலுகாக்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்த வேளாண் பாதுகாப்பு மண்டலமாக வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்த கூடாது என்றும், தோல் பதனிடும் தொழிற்சாலை, இரசாயன தொழிற்சாலை, இரும்பு உள்ளிட்ட […]
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு உள்ளது. தீரஜ் சாஹூவுடன் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த மதுபான ஆலையின் பல தொழிற்சாலைகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாலாரிகிர், திட்லாகர் மற்றும் சம்பல்பூர் தொழிற்சாலைகளில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் […]
புதிய கல்வி கொள்கையானது இந்திய வரலாற்றை திரிக்கிறது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். – என தனது எதிர்ப்பை அண்மையில் பதிவு செய்துள்ளார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 30நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
2026இல் மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும். அந்த ஜப்பான் நிறுவனம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கான பணிகளை இன்னும் மத்திய அரசு தொடங்கிவிலை – என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தெரிவித்து இருந்தார். இந்த தகவல் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால் அடிக்கல் நட்டியதை தொடர்ந்து வேறு எந்த பணிகளும் அங்கு தொடங்கப்படவில்லை […]
காங்கிரஸ் கட்சி எம்பி குழு தலைவர் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து நான்கு எம்பிக்களின் இடைநீக்கம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மக்களவை கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது முதல் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர். இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்பிக்களானா ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகிய தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட நான்கு காங்கிரஸ் எம்பிக்கள் அரசுக்கு எதிரான பதாகைகளை கொண்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் […]
கேரள மாநிலம் வயநாடு வந்துள்ள ராகுல் காந்தி சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தன் நாடாளுமன்ற தொகுதி வயநாட்டிற்கு வந்துள்ளார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் இன்று காலை மானந்தவாடி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார். இதனை அடுத்து மானந்தவாடியில் சட்ட படிப்பிற்கான நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் அமர்ந்து காங்கிரஸ் […]
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டர் நிறுவனம் ஒருதலை பட்சமாக நடந்துகொள்கிறது என்று சாடியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையை மீறியதாக அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பக்கம் ஆகியவற்றையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இது தொடர்பாக தற்போது ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ட்விட்டர் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்.பி சைக்கிளில் வந்து உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து, அவையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில ராஜ்யசபா எம்பி ரிபுன் போரா […]
காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் இன்று தனியார் மருத்துவமனையில் காலமானார். காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் ராஜீவ் சத்தா கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஜஹாங்கிர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவரது உடல்நிலை மோசமாக நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீங்கள் பஞ்சாப் முதல்வர் தான் பாட்டியாலாவின் மகாராஜா போல நடந்து கொள்ளாதீர்கள் என அம்மாநில காங்கிரஸ் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முதல்வருக்கும் எம்.பிக்கும் இடையே தற்பொழுது சில உரசல்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள காங்கிரஸ் எம்பி பார்த்தப் சிங் பஜ்வா, முதல்வர் அம்ரரீந்தர் சிங் ஒரு மகாராஜா போல நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முதல்வர் ஜனநாயகத்தை நம்புகிறவர் தானா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்; […]