தஞ்சாவூர் : கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் என்பவர் பொறுப்பில் உள்ளார். தமிழகத்தில் இருக்கும் ஒரே காங்கிரஸ் மேயர் இவர் தான். இவருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் (கவுன்சிலர்கள்) இடையே உரசல் போக்கு என்பது நேற்று உச்சம் தொட்டது என்றே கூற வேண்டும். நேற்று நடைபெற்ற கும்பகோணம் மாமன்ற கூட்ட முடிவில் கவுன்சிலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதை தொடர்ந்து மேயர் சரவணன் தனக்கு நெஞ்சுவலி எனக்கூறி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]