விருதுநகர்: நுரையீரல் தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், இன்று காலை சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்றது.திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. விருதுநகர் மாவட்டம், […]