பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் அக்., 28ந்தேதி இடைத்தேர்தல் மொத்தம் 243 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. 71 இடங்களுக்கு அக்.,28ந்தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 3 ஆம் தேதி 94 இடங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் மீதமுள்ள 78 இடங்களுக்கு மூன்றாம் கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீகாரில் […]
மக்களவை தேர்தல் நெருங்க இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி , பிரசாரம் என அடுத்தடுத்து தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக , காங்கிரஸ் காட்சிகள் கூட்டணி அமைத்த நிலையில் B.J.P_யும் வலுவான கூட்டணிக்கு திட்டமிட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு நாளில் பாஜக தலைவர்கள் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க இருக்கின்றார்கள்.அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் பாஜகவின் அமித்ஷா , மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , […]
சென்னையில் வசித்த தூத்துக்குடியை சேந்த சந்தியா என்ற சின்னத்திரை நடிகையை அவரது கணவர் இயக்குநர் பாலகிருஷ்ணன் துண்டுதுண்டாக வெட்டி கொடூரமாக கொலைசெய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் தூண்டுதுண்டாக வெட்ட பட்ட உடல்பாகங்களில் தலை மற்றும் இடுப்பு பகுதியை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் , துணை நடிகை சந்தியாவின் தலையை எப்படியும் கண்டுபிடித்து விடுவோமென சென்னை காவல் நிலைய ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னையில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் நடிகை சந்தியாவின் தலையை தேடும் பணி […]
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து , டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநாடு நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி சுஸ்மித்தா தேவ் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சுஸ்மித்தா தேவ் பேசுகையில் , மோடி அரசு கொண்டுவந்த முத்தலாக் […]
மதகுரு மற்றும் பாதிரியார்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவது உண்மைதான் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ், அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ் திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடைபெறுவது உண்மைதான் என்றார். மேலும் அவர் கூறுகையில் , சில மதகுருமார்கள் , பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குக்கின்றனர். இப்படி குற்றச் செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
ராகுல் காந்தி பிரதமரானால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் பலப்படுத்த ” சக்தி ‘ என்ற செயலி நாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று சக்தி என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். இந்தியாவில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் அப்போது ராகுல் காந்தி பிரதமராவார் . அதையடுத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது என்று, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் , அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். அணைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை வேறு மாநிலத்தில் இருந்தால் தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக் காட்டிய முதலமைச்சர், முல்லைபெரியாறு உள்ளிட்ட அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக […]