ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி? என்று கைதான குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் கைதான குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூல விவரம் வருமாறு:- சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிக்கடி பணம் எடுத்துச்செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இந்த ரெயிலில் கொள்ளையை அரங்கேற்ற நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தோம். இதற்காக சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து நோட்டமிட்டு வந்தோம். இதற்காக சேலம் ரெயில் நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் பல நாட்கள் வேவு பார்த்து வந்தோம். […]