விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நாளை நடைபெறும் நிலையில், ஒரு பக்கம் தவெக நிர்வாகிகள் நேற்று மாலை முதலே குவிய தொடங்கினர். மறுபக்கம், பாதுகாப்புக்காகக் குவியும் காவல்துறை அதிகாரிகள். ஆம், மாநாட்டின் பாதுகாப்பிற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் தனித்தனி அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த அணிகள் எந்த […]
நாட்டின் 75-குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் அகில இந்திய தலைமை அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, இந்த மாநாடு இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை அடுத்து உடனடியாக நடைபெறுவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. குடியரசு தினத்தையொட்டி நமது அரசியலமைப்பு சட்டமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சமயத்தில், அரசியல் நிர்ணய […]
நாமக்கல் மாவட்டத்தில் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.“உள்ளாட்சியிலும் நல்லாட்சி” என்ற தலைப்பில்,காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். மேலும்,திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்,டிஆர்பாலு உள்ளிட்டோரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.இதனிடையே,முதல்வரின் வருகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,டிரோன் […]
வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி,ஜூலை 3 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் காலை 9.30 மணி முதல் 5 மணி வரை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.மேலும், உள்ளாட்சியிலும் நல்லாட்சி உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுவார்கள் என்றும்,திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி […]
கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் புறக்கணிப்பு. குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. NEP தொடர்பாக குஜராத்தில் இன்றும், நாளையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இன்றும், நாளையும் குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும், அவற்றை சிறப்பாக செயல்படுத்தவும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது. மார்ச் 10-12ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதல் முறையாக வனத்துறை அலுவலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பனை மாநாட்டில், விழிப்புணர்வு ஊர்வலத்தினை அமைச்சர் பாண்டியராஜன், தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தனது தாத்தா பனை மரம் ஏறியவர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதாக தெரிவித்தார். நீர்நிலைகளை பாதுகாத்திட பனை மரம் முக்கிய பங்காற்றுவதாகவும் முதிர்ச்சி அடைந்த பனை மரங்களை விற்பதற்கு அரசு சார்பில் முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வாகனம் வழங்குவது போல் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவி வழங்குவதற்கான திட்டத்தை […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதன் காரணமாக கூகுள் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வான கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் நடத்த இருந்த ஐ / ஓ டெவலப்பர் மாநாட்டை ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பை நிறுவனம் பங்கேற்பாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் மே 12 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைகழகத்தில் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் மோடி பேசுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் வெற்றியில் தான் நமது நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைகழகத்தில் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிறகு பிரதமர் மோடி பேசுகையில், வான்வெளி ஆராய்ச்சியில் சாதனை புரிந்து வருவது போல் நாம், ஆழ்கடல் […]
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாக கூறிய அவர், பொது மக்கள் […]
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு, உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய நிலவரப்படி 250 நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பதிவு செய்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். தென்கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து, உள்ளிட்ட நாடுகள் தமிழகத்தில் தொழில் தொடங்க […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நிறைவு புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை தொடங்கிய பேரணி பொது கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் , தலைவர்கள் பேச்சு : மாநிலங்கவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் , DYFI-யின் […]
4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சி பணியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் பங்கேற்று உள்ளனர். இன்று ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுகிறது