தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. பின்னர், அதிக சளி இருப்பதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். மேலும் […]
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96) உடல்நல குறைவு முதிர்வு காரணமாக இன்று காலமானார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி பாத்திமா பீவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். 1927ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பிறந்த பாத்திமா பீவி, திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டமும், பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தங்கப் […]
திரைப்பட இயக்குனர் மற்றும் கதை ஆசிரியரான சொர்ணம் என்பவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்கிய திரைப்பட இயக்குனர் மற்றும் கதை ஆசிரியரான சொர்ணம் என்பவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலியை செலுத்து விட்டு ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை […]