டெல்லி:முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். […]
அவதூறு கருத்துக்களை பரப்பியதாக எம்.கே.பி நகர் போலீசார் பதிவு செய்திருந்த கொலை மிரட்டல் வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆக.14 ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து,மீரா மிதுனுக்கு இரண்டு வாரம் நீதிமன்ற காவல் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். […]
பாரதமாதா ,மற்றும் தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, கிருஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் அருமனையில்,முன்னதாக நடைபெற்ற மத பிரச்சார கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத மாதா, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் அளித்த புகாரை அடுத்து […]
திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தன் மீது உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பப்பட்டுள்ளது. வழக்கில் விசாரணை செய்யாமல் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என ஆதி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரியிருந்தார். […]
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி செய்த வழக்கில் தந்தை, மகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண்முறையில் மருத்துவ காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் பெற்று 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவர மாணவி தீக்க்ஷா மற்றும் அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீது […]
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் சுரேந்திரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் இருவருக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த விவாகத்தில் கைது செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகிய இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் சிபிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என […]