விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியதற்காக,பட்டியல் இனத்தை சேர்ந்த மூன்று முதியவர்களை, ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த சம்பவத்திற்கு எதிராக இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,மறுபுறம் சாதிக் கொடுமைகளும் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில்,விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியதற்காக, பட்டியல் இனத்தை சேர்ந்த மூன்று முதியவர்களை, ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் […]
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். தமிழக அரசுக்கு கண்டனம். pic.twitter.com/iohGohZW9e — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 3, 2020 இதற்காக […]
குல்பூஷண் ஜாதவ்_வுக்கு மரண தண்டனை பாகிஸ்தான் தன்னிசையான முடிவு இந்தியா சரமாரி குற்றச்சாட்டு குல்பூஷண் ஜாதவ் வழக்கில் இந்தியா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, தான் எடுத்துரைத்த வாதத்தில், குல்புஷண் ஜாதவ் மரண தண்டனை தொடர்பாக நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று இந்தியா பல முறை முயற்சி செய்து வந்ததாகவும் , பாகிஸ்தான் நாடு ஒருமுறை கூட ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றம் சுமத்தினர். மேலும் தெரிவிக்கையில் குல்பூஷண் தரப்பில் அவரின் விளக்கத்தை கேட்காமல் பாகிஸ்தான் நாடு […]
உத்திரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்த முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் காவலர் அகிலேஷ் யாதவ் மீது கையை வைத்து தடுத்து நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.இதனால் அங்கு பரபரப்பான சுழல் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ்_வை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என்று பகுஜன் சாமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மெகா கூட்டணியை பார்த்து பாஜக அரசு […]
மோடி வருகையை கண்டித்து கருப்பு கோடி போராட்டம் நடத்தி கைதான திருமுருகன் காந்தி அதற்கான விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து மே 17 இயக்க திருமுருகன்காந்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் மோடிக்கு கருப்புக்கொடி காட்டி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மதவெறியை ஆதரிக்கவில்லை ஜாதியை ஆதரிக்கவில்லை . ஆனால் பாஜக உயர் சாதிகளுக்கு மட்டுமே வேலை செய்கிறது . ஆகவே மோடியை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த படுகொலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார.மேலும் அவர் தெரிவிக்கையில் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்தினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் மத வெறி தொடர்பாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகள் கல்யாணராமனை எச் ராஜா நேரில் சந்தித்து பேசினார்.அப்போது சிறைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறுகையில் இந்த நாட்டில் தேசியவாதி என்றால் கருத்துரிமை மறுக்கப்படும். மேலும் ஹிந்து மதத்தையும் பிரதமரையும் இழிவுபடுத்திய லயோலா கல்லூரி முதல்வர் மற்றும் ஓவியர் முகிலன் ஆகியோரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.மேலும் அவர் லயலோ கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகாயத்தின் […]
C.B.I_யை தனது கைப்பாவையாக பாஜக பயன்படுத்தி வருவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி […]
ஜெயலலிதா மரணத்தின் விசாரணை தொடர்பாக சர்சையாக கருத்து தெரிவித்த அமைச்சர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி சண்முகம் , மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் தொனியில் I.A.S அதிகாரிகள் செயல்பட கூடாது. அமைச்சர்களை கட்டுக்குள் வைக்கவேண்டுமென்று கூறுவது சரியானதும் இல்லை என்று அமைச்சர் சி.வி சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.