தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மக்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.அதில் சில பேருந்துகளில் நடத்துனர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது.டத்துநர் இல்லா பேருந்துகளை நிறுத்த வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து என்ற பெயரில் பயணிகளின் உயிரோடு விளையாடுவதை கண்டிப்பது, பதவி இறக்கம், பணியிடை மாற்றம் என்ற அடிப்படையில் தொழிலாளர்களை பழிவாங்குவது கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்டோன்மென்ட் அரசு போக்குவரத்து டெப்போ முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு நபர்கள் கலந்து கொண்டனர்.