அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருகின்ற வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் வழக்கமாக அதிபர் நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் முன்பு பேசுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் வரும் 29-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத்தில் உரையாற்ற வரும்படி அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுக்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா அரசின் துறைகள் 4 வாரங்களுக்கும் மேலாக முடங்கி இருப்பதால், முதலில் அதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.மேலும் அவர் கூறுகையில் அரசுத்துறைகள் […]