மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர் இன்று அதிகாலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில்,முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர்,மகளிர்தினம் உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.மேலும்,அவர் எழுதிய,”கம்யூனிசம்-நேற்று இன்று நாளை” எனும் நூல் அதிக பிரதிகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில்,தோழர் இரா.ஜவகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]