தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் விளம்பரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை அதாவது 25% இடங்களுக்கு இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் RTE திட்டத்திற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை […]