எங்கு சென்றாலும் எதையாவது போட்டோ எடுக்கும் பழக்கம்(நோய்) நமக்கு பரவி உள்ளது. தற்போதைய இளைய தலைமுறையினர் இதற்கு பெரிதும் அடிமையாகி உள்ளனர். நல்ல ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் சுலபமாக நல்ல புகைப்படத்தை எடுத்து முகநூல், வாட்சப் போன்றவற்றில் பதிவாக வெளியிடுவார்கள். ஆனால், என்னை போன்று மொக்கை போன் வைத்திருப்போருக்கு “ஷேரிங்” தான் ஒரே வழி. நம் நண்பரின் போனில் எடுத்த புகைப்படத்தை அப்படியே நமது போனிற்கு ஷேர் செய்து கொள்வோம். ஆனால், இதன் தரம் நிச்சயம் குறைந்திருக்கும். […]