கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். சிதம்பரத்தை அடுத்த சி. முட்லூர் பகுதியில், 24 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியிருந்தது. இதைத் தொடர்ந்து 19 கோடி ரூபாய் மதிப்பில் நீதிமன்ற கட்டடமும், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டடங்களும் கட்டப்பட்டன. அதனை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். […]