அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு பதிவு முறை அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எழுத்து மூலம் புகார் தெரிவிக்க, புகார் பதிவேடு முறையை அமலபடுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையவெளியில் புகாரை தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதாக, ஆய்வு கூட்டத்தில் எம்எல்க்கள் கூறியதால் புகார் பதிவேடு முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளனர். இணையவழியில் புகார் நடைமுறையும் அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]