தமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி […]