அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகை உயர்வு. அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுபோன்று, கருத்தடை செய்த ஒரு மாத காலத்திற்குள் உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த கனிமொழி […]