திரிபுராவில் ஆர்எஸ்எஸ்/பாஜக வெறியர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து லெனின் சிலையைத் தகர்த்திருப்பதை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. அதேபோன்று திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தாக்கப்பட்டிருப்பதை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. கடந்த மார்ச் 6ஆம் தேதி திரிபுராவில் இருந்த லெனின் சிலையை, பாஜகவினர் அகற்றினர். தேர்தல் முடிவு வெளியான 2 நாட்களுக்குள் பாஜகவினர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பாஜகவினர், பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். […]
இன்று ரஷ்ய சோசலிசக் குடியரசின் நிர்வாகத் தலைவராக விளங்கிய விளாடிமிர் லெனின் நினைவு நாள் – ஜன.21, 1924. மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு தலைமையேற்று நடத்தி ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் தலைவர் லெனின் ஆவார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான “லெனின்” என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். ஒரு செயல்வீரராக விளங்கிய. லெனின் கார்ல் மார்க்சின் கொள்கைகளை […]