பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசம் வகுப்பு மோதல்கள் அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராக் கங்காராம் அகிர், உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துமூலம் பதிலளித்தார். அப்போது 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் 822 வகுப்பு மோதல்கள் நிகழ்ந்ததாகவும், இது முந்தைய ஆண்டைவிட அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிக அளவாக உத்தரப் பிரதேசத்தில் 195மோதல்களும், கர்நாடகத்தில் 100மோதல்களும் நிகழ்ந்துள்ளன. ராஜஸ்தானில் 91மோதல்களும், பீகாரில் 85மோதல்களும், மத்தியப் பிரதேசத்தில் 60மோதல்களும் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மதக் காரணங்கள், […]