காமன்வெல்த்தில் 20 தங்கம் பதக்கம் வென்று பதக்க பட்டியலில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா. 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில், காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அதன்படி, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில் 20 […]
காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதி போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார் இந்தியாவின் லக்ஷ்யா சென். 2022-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென் தங்கம் பதக்கம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை லக்ஷ்யா சென் 19-21 21-9 21-16 என்ற செட் கணக்கில் மலேசியாவின் NG Tze Yong-ஐ வீழ்த்தி தங்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா தனது 20வது தங்கத்தை பதிவு […]
காமன்வெல்த் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார் பிவி சிந்து. காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பி.வி.சிந்து. கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் கலப்பு இரட்டையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் […]
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலப்பு இந்திய பேட்மிண்டன் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கலப்பு பிரிவின் இறுதி போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. பேட்மிண்டன் கலப்பு அணி பிரிவில் மலேசியாவை எதிர்த்து இந்தியா விளையாடியது. இதில், இந்திய பேட்மிண்டன் கலப்பு அணி, மலேசியாவுக்கு எதிராக 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது. மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவுக்கு எதிரான மோதலில் பிவி சிந்து […]
71 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் தொடரில் பெண்களுக்கான 71 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலம் பதக்கம் வென்றார். இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர், பெண்களுக்கான 71 கிலோ பிரிவில் 212 கிலோ எடையை (ஸ்னாட்ச் 93, க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 119) தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 7வது பதக்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் சாரா டேவிஸ் 229 […]
காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங் ஹாம் நகரில் காமன்வெல்த் (commonwealth games 2022) போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்திய வீரர்கள் பளு தூக்குதல் போட்டியில் அசதி வருகின்றனர். ஆடவருக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். பளு தூக்குதல் போட்டியில் 19 வயதான அச்சிந்தா ஷூலி […]
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் சங்கேத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து. இங்கிலாந்தில் காமன்வெல்த் சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதல் போட்டியில் 55 கிலோ ஆடவர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கேத் சர்கார் கலந்துகொண்டார். இவர் 248 கிலோ தூக்கி வெள்ளி புத்தகம் வென்றார். பளுதூக்கும் வீரர் சங்கேத் சர்கார் காயம் இருந்தபோதிலும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். மேலும், ஆடவருக்கான 55 கிலோ […]