கிளாஸ்கோ : 2026 -ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருக்காது எனக் காமன் வெல்த் சம்மேளனம் அறிவித்துள்ளது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி, பாட்மிண்டன், ஹாக்கி, ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் மற்றும் மல்யுத்தம் போன்ற பிற விளையாட்டுகளும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை இந்த போட்டிகளில் விளையாடி இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது போன்ற முக்கியமான போட்டிகள் காமன்வெல்த் விளையாட்டு 2026 இல் இருந்து […]
3000 மீ தடை ஓட்டத்தில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு வருகிறது. இதில் இந்தியா நல்ல எண்ணிக்கையில் பதக்க வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மேலும் ஓர் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. 3000 மீ தடை ஓட்டத்தில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய தடகள வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். இதுவரை இந்தியாவுக்கு 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்துள்ளனர். இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியினர், குரூப் பி பிரிவில் இன்று கனடாவை வீழ்த்தி 4 போட்டிகளில் 3இல் வெற்றி என 2ஆம் இடம் பிடித்து, அரையிறுதிக்கு […]
காமன்வெல்த் போட்டியில், 109கிலோ எடை பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. அதில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்கள் வென்று சாதித்து வருகின்றனர். தற்போது பளுதூக்குதல் போட்டியில் 109கிலோ பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் கலந்துகொண்டு 355 கிலோ வரையில் தூக்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி , 4 […]
தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதன் காரணமாக, அவரது தடைக்காலம், 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிக்காக முன்பே ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததன் காரணமாக, தனலட்சுமி காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்வதில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டார். அதன் பிறகு அவர் மீது ஊக்கமருந்து சோதனை உறுதியானதை தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. தற்போது அவரே […]
இந்தியாவின் 19 வயது பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா, காமன் வெல்த் 2022ல் ஆண்கள் 67 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். ஜெர்மி ஸ்னாட்ச் முறையில் 140 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 160 கிலோவும் சேர்த்து மொத்தம் 300 கிலோ எடையைத் தூக்கி, காமன் வெல்த்தில் சாதனையைப் படைத்தார். காமன் வெல்த் 2022 இல் இந்தியா இப்போது இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் முதல் […]
எனது முழங்கை காயம் காரணமாக வெள்ளிப்பதக்கம் தான் வெல்ல முடிந்தது என வருத்தத்துடன் சங்கேத் சர்கார் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் காமன்வெல்த் தடகள போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 55 கிலோ எடைப்பிரிவில், சங்கேத் சர்கார் எனும் 22 வயது வீரர் பங்கேற்றார். அவர் இறுதிப்போட்டியில் மொத்தமாக 248 கிலோ எடை தூக்கி, வெளிப்பதக்கத்தை பெற்றார். காமன்வெல்த் போட்டியின் இந்தியாவின் முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். இவருக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். […]
காமன்வெல்த் போட்டியில், பளுதூக்கும் போட்டியில் 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் தடகள போட்டியில் இந்தியா சார்பில் 61 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட குருராஜா எனும் வீரர் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இவர் மொத்தமாக 269 கிலோ எடை தூக்கி வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் காமன்வெல்த் பதக்கம் 2 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இதே பளுதூக்கும் போட்டியில் 55கிலோ எடைப்பிரிவில், சங்கேத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
காமென்வெல்த் 2022இல் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை சங்கேத் சர்கர் வாங்கி கொடுத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சரவதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பளுதூக்குதல் போட்டியில் 55கிலோ ஆடவர் பிரிவில் சங்கேத் சர்கர் கலந்துகொண்டார். இவர் 111, 107, 113 கிலோ எடையை அடுத்தடுத்த முறை தூக்கி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கி உள்ளார். 55 கிலோ ஆடவர் பளுதூக்குதல் போட்டி […]
14 வயதுஸ்குவாஷ் வீராங்கனை காமன் வெல்த் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம். இங்கிலாந்து நாட்டில் பார்மிங்கில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள், அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி வருகிறார்கள். அந்த வகையில் பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 14வயது வீராங்கனை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஸ்குவாஷ் வீரர் அனாஹத் சிங் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் ஜாடா […]
காமன்வெல்த் விளையாட்டுகள் (CWG) என்பது ஒரு சர்வதேச பல்விளையாட்டு நிகழ்வாகும், இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இது 286 விளையாட்டு போட்டிகளை உள்ளடக்கியது மற்றும் இந்த போட்டிகள் 11 நாட்கள் நடைபெறும். காமன்வெல்த் விளையாட்டுகளில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும். பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் 2022 வரலாற்றில் மிகப்பெரிய பாரா விளையாட்டு நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் டேபிள் டென்னிஸ், புல்வெளி கிண்ணங்கள், தடகளம், சக்கர நாற்காலி கூடைப்பந்து, […]
இந்திய குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, காமென்வெல்த் போட்டி தொடரில் பயிற்சி மேற்கொண்டு வரும் எனக்கு தொடர் மனஉளைச்சல் கொடுக்கப்படுகிறது என வருத்தம் தெரிவித்துள்ளார். உலக அளவில் புகழ்பெற்ற காமென்வெல்த் போட்டித்தொடர் ஜூலை இறுதியில் தொடங்க உள்ளது. இதில் உலக அளவில் தடகள போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள். இதில், இந்தியா சார்பில் தடகள வீரர், வீராங்கனைகள் 215 பேர் கலந்துகொள்ள உள்ளனர். அதற்காக தற்போது அனைவரும் இங்கிலாந்து, பிர்மிங்கம் எனும் ஊரில் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். அதில், கடந்த […]