பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில், அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக ஆலோசனை. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 2 நாள் நடக்கும் கர்நாடக பாஜக செயற்குழு கூட்டம் ஒசப்பேட்டேவில் இன்று கூடுகிறது. கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீஸ், முதல்வர் பசவராஜ், தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில், அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது. அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் புகார் கூறிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார். […]
தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் ஆலோசனை. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினருடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.