மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து அரசு உத்தரவு. அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை, சட்டத்துறை செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை […]
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவானது கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான,நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு […]
இலங்கைக்கு பொருட்கள் அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து உத்தரவு. இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த பொருள்களை அனுப்பி வைப்பதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை […]
2020-21-ஆம் கல்வியாண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு தொடக்க & நடுநிலைப் பள்ளிகளில், சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த பள்ளிகள் என்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும், தலா 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளது. சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து பட்டியலை அனுப்ப அக்குழுவிற்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை குறித்து நேரில் விசாரணை நடத்த மத்திய பிரதேச எம்.பி சந்தியா ராய் உட்பட 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது தேசிய பா.ஜ.க. தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதாவது, அந்த மாணவியை, பள்ளி ஆசிரியர்கள் சிலர் மத மாற கட்டாயப்படுத்தியதால் தற்கொலை […]
தமிழகத்தில் மியூகார்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்க, மருத்துவக் கல்வி இயக்குநர் தலைமையில்,13 பேர் கொண்ட அலுவல் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும்,தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,இந்த பணிகளை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,தென்காசி மாவட்டம் […]
தமிழகத்தில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தொடர்பாக ஆராய 12 பேர் கொண்ட குழு அமைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இ.ஐ.ஏ (Environmental impact assessment) விவகாரம் தொடர்பாக ஆராய 12 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட இ.ஐ.ஏ அறிக்கை தொடர்பான சாதக, பாதகங்களை 12 பேர் குழு ஆராய்ந்து வெளியிடும் என்று கூறப்படுகிறது.