டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 394 போலீஸ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நேற்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியது. இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக வெடித்தது. செங்கோட்டையை முற்றிகையிட்ட விவசாயிகள், அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினர். பின்னர் வன்முறை தீவிரம் காரணமாக காவல்துறை தடியடி நடத்தப்பட்டது. […]