பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுதேர்வு போல் பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து இறுதி தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அனைத்து அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகபட்டது. அரையாண்டு தேர்வு முதல் நாளான […]