காமன்வெல்த் ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா-தீபிகா பலிக்கல் ஜோடி, நியூசிலாந்தின் கிங்-முர்பே ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில், 9-11, 9-11 என்ற செட்களில் ஜோஷ்னா, தீபிகா ஜோடி தோல்வி அடைந்து வெள்ளி வென்றது. இவர்கள் கடந்த 2014 காமன்வெல்த்தில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்துள்ளனர். இன்று நடந்த பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தங்கத்தையும், பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார். அதேநேரத்தில் ஆடவர் பிரிவில் விளையாடிய கிடாம்பி ஸ்ரீகாந்தும், ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடியும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர். இவர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பேட்மிண்டனில் இந்தியாவின் மகள்கள், பெருமை சேர்த்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் […]
காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னாநேவால் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவருடன் மோதிய பி.வி. சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டில், இந்தியா மிகப்பெரிய பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. கடைசி நாளான இன்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால், 21க்கு 18, 23க்கு 21 என்ற நேர்செட் கணக்கில் பி.வி சிந்துவை […]
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தியா 11 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில், இன்று ஆண்களுக்கான 50 மீ பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்தது. இதில் இந்திய வீரர் ஓம்பிரகாஷ் மிதர்வால் 201.1 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தியா 11 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]