உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்து பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ACE(angiotensin converting enzyme ) மற்றும் ARB (angiotensin II receptor blocker) ஆகிய மருந்துகள் இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் போன்றவற்றிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் ஆஞ்சியோடென்சின் என்ற வேதிப்பொருளைத் தடுக்கின்றன. ஆஞ்சியோடென்சின் தமனிகள் குறுகுவதற்கு காரணமாக உள்ளது. தமனிகள் குறுகுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. […]