நவம்பர் 1 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது மத்திய கல்வித்துறை அமைச்சகம். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கல்லூரிகள் & பல்கலைக் கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. […]
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஆயிஷா என்ற கல்லூரி மாணவி நேற்று கல்லூரி முடிந்து தரமணி பறக்கும் ரயில் நிலையத்திற்கு வந்த போது பார்த்த ரயில்வே ஊழியர்கள் யோகேஷ் , லூகாஸ் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் சேர்ந்து மிரட்டி ஆயிஷாவை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக ஆயிஷா அளித்த புகாரின் பேரில் ரயில்வே ஊழியர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.