தமிழகத்தில் வருகின்ற 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லூரி விடுதிகளுக்கு வரும் மாணவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தாலும் விடுதியில் பயிலும் மாணவர் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. […]
நாடு முழுவதும் பரவிய கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வருகின்ற 16-ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளும், அனைத்து இளநிலை படிப்பு துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில், இன்று பள்ளிகள் திறப்புக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு என்ன […]