இறுதியாண்டு தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தவேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் என அனைத்தும் திறக்கப்படாமல் இருக்கிறது. பள்ளித்தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்தும் மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு […]