பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்காட்டில் உள்ள ‘பிரைம்’ சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 19 மாணவர்கள் நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை தொடங்கும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுக்கு அந்த தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை. நாளை தேர்வு தொடங்கும் நிலையில், ஹால்டிக்கெட் வராததால் பரிதவிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சம்மந்தப்பட்ட பள்ளிக்கு 8ஆம் வகுப்பு வரை கூட அங்கீகாரம் […]
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து வருவதாக விமர்சித்துக் கூறியிருந்தார். அது மட்டுமின்றி அந்த அறிக்கையில் “போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. மு.க. ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை […]
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் இந்த அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, சுமார் 2.06 லட்சம் சதுரடி பரப்பில் 6 தளங்களுடன் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. தற்போது கட்டிட பணிகள் முடிந்து 2 வருடங்களுக்கு பிறகு இந்த அலுவகம் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை […]
சொத்து வரி செலுத்தாதவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி,கூடுதல் சொத்து வரியை செலுத்தும்படி,நாமக்கல் தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை எதிர்த்து அக்கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அதிக கட்டணம் வசூலித்து வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் வரி […]
இயந்திரத்தில் சிக்கி கை துண்டான தற்காலிக துப்புரவு பணியாளர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரேவதி. பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கின் மீது நுண் உரம் செயலாக்க மையத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மக்கும் உரங்களையும், மக்காத உரங்களையும் பிரித்தெடுத்து அதனை இயந்திரத்தில் மாற்றி வேலை செய்து […]
புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு அலுவலகங்களுடன் கூடிய கட்டடத்திற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், செங்கல்பட்டில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104 கோடியும், திருப்பத்தூரில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.109 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.