நாமக்கல் : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். தற்பொழுது, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளிபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று (22-10-2024) மட்டும் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். பள்ளிபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் […]