வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேசை உடைக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில்,மேசை உடைக்கப்பட்டது தொடர்பாக பன்னிரெண்டாம் வகுப்பை சேர்ந்த 10 மாணவர்களை மே 5 ஆம் தேதி வரை தற்காலிகமாக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும்,பெற்றோருடன் வந்த மாணவர்களுடன் இனி ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும்,மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.