சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 11, 12, 13 ஆகிய தேதிகளில் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் 29 சிறப்புக் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு முன்பதிவு நேற்று முன் தினம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் 8-வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில், தற்போது வரை முன்பதிவுகள் நடைபெறாததால் சிறப்புக் கவுண்டர்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. […]