கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனவும், அவர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் […]