அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை கோகோ காப்க்கு,கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.இதன்காரணமாக,ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டு,விளையாட்டு வீரர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில்,போட்டியில் கலந்து கொள்ளும் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. […]