வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதன் பின்னர் அவர் கூறுகையில்,நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.