தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்குதான் உள்ளது என்றும்,இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத அளவிற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறுகையில்: “தனியார் கொள்முதல் இல்லாமல் சொந்தமாக 6,220 மெகாவாட் மின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.நிலக்கரி கையிருப்பு ஆறரை நாட்களுக்கு உள்ளது. எனினும்,137 டாலருக்கு 4 லட்சத்து 80 […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலக்கரி சுரங்கம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள தகவலில், இந்த நிலக்கரி சுரங்கம் கடந்த இரண்டு மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இதன் அடியில் தற்பொழுது சட்டவிரோதமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிலக்கரி சுரங்கம் இன்று காலை எட்டரை மணியளவில் இடிந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் காயமடைந்தோர் அல்லது உயிரிழந்தோர் குறித்த எந்த தகவலும் […]
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ஆந்திரப்பிரதேச அரசு ரத்து செய்துள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ய இரண்டு டெண்டர்களுக்கு ஆந்திர அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. ஏலத்தில் அதானி நிறுவனம்: இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வியாபாரியான அதானி நிறுவனம் மட்டுமே 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்றது. அதைப்போல 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்ற அகர்வால் நிறுவனம் அதானி நிறுவனத்தை விட அதிக […]
அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனதாக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்,இன்று வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசியதாவது: “தொடர்ந்து 100 நாட்களை கடந்து தொடர்மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம்.எனினும்,அதற்கு பிறகு துயரம் என்று சொல்வதா? அல்லது வருத்தம் அளிக்கும் செய்தி என்று சொல்வதா? என தெரியவில்லை. ஏனெனில்,நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது.அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் […]
ஒடிசாவில் இந்திய நிறுவனத்தின் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது.இந்த சுரக்கத்தில் இருந்து லாரி மட்டும் ரயில் மூலமாக நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நிலக்கரி ஏற்றி செல்லும் லாரியின் குறுக்கே ஒரு ஆடு சென்றதால் லாரி மோதி ஆடு உயிரிழந்தது. இதற்கு நஷ்ட ஈடாக 60,000 ரூபாய் கேட்டு அப்பகுதி மக்கள் நிலக்கரி ஏற்றி செல்லும் ரயில் பாதையில் மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 02.30 வரை இப்போராட்டம் நடந்தது. […]
நிலக்கரி போக்குவரத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றசாட்டியுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், சில ஆவணங்களை வெளியிட்டார். இந்திய நிலக்கரி சுரங்கங்களில் இருந்து தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு வருவதில் இந்த முறைகேடு நடந்ததாக அவர் கூறினார். கடந்த 2001ம் ஆண்டில் வெறும் 5 மாதங்களுக்கு மட்டுமே கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு தற்போது வரை […]